இந்தியா ஏ- இங்கிலாந்து லயன்ஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது ஆதிகாரபூர்வமற்ற 4 நாள் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா ஏ அணி 557 ரன்னுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், இங்கிலாந்து லயன்ஸ் அணி 587 ரன்கள் குவித்து 30 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனையடுத்து 30 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணி 41 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 241 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி வரும் 6ம் தேதி தொடங்குகிறது.