இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. சவுத்தம்டனில் 16ம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.