செய்த நிலையில், தொடக்க வீரர்களான சாம்சன் 10 ரன்களிலும், அபிஷேக் சர்மா 15 ரன்களிலும், அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 8 ரன்களிலும் நடையை கட்டினர். பின்னர் வந்த ரிங்கு சிங், நிதிஷ் ரெட்டி அதிரடியாக விளையாடிய நிலையில், இந்தியா 221 ரன்கள் குவித்தது. நிதிஷ் ரெட்டி 74 ரன்களும், ரிங்கு சிங் 53 ரன்களும் எடுத்தனர். பின்னர் விளையாடிய வங்கதேச வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியாக 135 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.