ஒரு வாரத்திற்குள் ஐ.பி.எல். தொடர் மீண்டும் தொடங்கவில்லை என்றால் அது பி.சி.சி.ஐ.-க்கு பெரிய தலைவலியாக அமையும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் மாலன் எச்சரித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் பெரிய டெஸ்ட் தொடர் வர உள்ளதாகவும், அந்த போட்டிகளுக்கு முன் இந்தியாவிலோ அல்லது வேறு இடத்திலோ ஐ.பி.எல். தொடரை முடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.