ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு பதிலாக மாற்று அணி களமிறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தபிசூர் ரஹ்மான் நீக்கப்பட்டார். இதனால் வங்கதேச அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளாது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இந்த சூழலில், இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடுவது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் நாளைக்குள் பதிலளிக்க வேண்டும். இல்லையெனில் வங்கதேசத்துக்கு பதிலாக மாற்று அணி களமிறக்கப்படும் எனவும் ஐசிசி எச்சரித்துள்ளது.இதையும் படியுங்கள் : ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர்