ஐசிசியின் டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 112 ரன்கள் விளாசியதன் மூலம் 771 புள்ளிகளுடன் அவர் மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார். ஆஸ்திரேலியாவின் பெத் மூனி முதலிடத்திலும், வெஸ்ட் இண்டீசின் ஹேலே மேத்யூஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.