அடுத்த போட்டியில் 200 ரன்கள் அடிக்க முயற்சி செய்வதாகவும், 50 ஓவர்கள் களத்தில் நிலைத்து நின்று விளையாட திட்டமிட்டு இருப்பதாகவும் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்த பின்பு அவர் இதனை கூறினார்.