கடைசி இரண்டு ஆட்டங்களில் டக் அவுட் ஆன விராட் கோலி, கடைசி ஆட்டத்தில் ஒரு ரன் எடுத்ததும் கொடுத்த ரியாக் ஷன் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹசில்வுட் வீசிய ஓவரை எதிர்கொண்ட அவர், முதல் பந்திலேயே ஒரு ரன் எடுத்தார். இதனால் கையை தூக்கி அப்பாடா ஒரு ரன் அடித்துவிட்டேன் என்பதுபோல், காண்பித்தார்.