ஹாக்கி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் ஹைஃபை கொடுத்துக்கொண்டது உலக மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மலேசியாவில் நடைபெற்ற போட்டி 3-3 என்ற கணக்கில் டிரா ஆனது. போட்டி முடிந்த பிறகு இரு நாட்டு வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் ஹைஃபை கூறி தங்கள் கரங்களால் தட்டிக் கொண்டனர். கிரிக்கெட்டில் நிகழாத ஒன்று ஹாக்கியில் நிகழ்ந்திருப்பதை பலரும் பாராட்டியுள்ளனர்.