ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் 41 பந்துகளில் சதம் விளாசியுள்ள டெவாலட் ப்ரீவிஸ் மிக இளம் வயதில் சதம் அடித்த தென் ஆப்பிரிக்க பேட்டர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையிலான 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் 4-வது வீரராக களம் இறங்கிய டெவால்டு ப்ரீவிஸ் 56 பந்துகளில் 125 ரன்கள் விளாசி அவுட் ஆனார்.இதன்மூலம் 22 வயதில் சதம் விளாசிய தென் ஆப்பிரிக்கா பேட்டர் என்ற சாதனையையும், டி20 போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்காக 2-வது வேகமான சதத்தை பதிவு செய்த வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார்.