உலக சாம்பியன் குகேஷை வீழ்த்திய அமெரிக்க செஸ் வீரர் ஹிகாரு நகமுரா, உடனே குகேஷின் ராஜா காயை எடுத்து வீசிய வீடியோ வெளியாகி இணையத்தில் பேசு பொருளாக மாறியது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் செக்மேட் செஸ் போட்டி நடைபெற்றது. இதில் 4-0 என்ற கணக்கில் இந்திய அணி ஏற்கனவே தோல்வி அடைந்த நிலையில், இறுதி ஆட்டத்தில் குகேஷ் மற்றும் அமெரிக்கா கிராண்ட்மாஸ்டர் ஹிகாரு நகமுரா மோதினர். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஹிகாரு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக குகேஷின் ராஜா காயை எடுத்து விசிறியடித்தார். இதனை சற்றும் எதிர்பார்காத குகேஷ், அவரின் செயலை கண்டு அதிர்ச்சியடைந்தார்.