ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதற்குப் பிறகு ஹர்மன் ப்ரீத் கவுர், கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டும் என முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசாமி கருத்து தெரிவித்துள்ளார். ஹர்மன் ஒரு சிறந்த பேட்டர் மற்றும் ஃபீல்டர் என்றாலும், கேப்டன் பதவியின் சுமை இல்லாமல் இருந்தால் அவர் இன்னும் சிறப்பாக பங்களிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.