இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி மேற்கொண்டு வரும் பயிற்சியில் இளம் சுழற்பந்து வீச்சாளர் ஹர்ப்ரீத் பிரார் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசியது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்த தொடரில் தேர்வு செய்யப்படாத அவர், இந்திய அணியின் பயிற்சியில் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது.