அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தியில் நவம்பர் மாதம் நடைபெறும் இந்தியா-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலை 9 மணிக்கே தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்ட் போட்டிகள் வழக்கமாக காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் சூரிய அஸ்தமனம் முன்னதாகவே நிகழும் என்பதால் முன்னரே போட்டி தொடங்குகிறது. இதே போன்று காலை 11 மணிக்கு தேநீர் இடைவேளையும், மதியம் 1.20 மணிக்கு உணவு இடைவேளையும் திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் 2 மணிக்கு போட்டி தொடங்கி 4 மணிக்கு முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.