ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது. இதையடுத்து, களமிறங்கிய ஐதராபாத் அணி 186 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது,.