பாரீசில் நடைபெற்று வரும் பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில், கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 2வது சுற்றுக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில், ஸ்பெயினின் ராபர்டோ கார்பலேஸ் பேனா உடன் பலப்பரீட்சை நடத்திய அவர், 4 க்கு 6, 6-க்கு 3, 6 க்கு 3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.