ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் முக்கிய ஸ்பான்சராக கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏ.ஐ. களத்தில் இறங்கியுள்ளது. அதாவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் ஸ்பான்சராக அடுத்த 3 ஆண்டுகளுக்கு தொடர 270 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. கிரிக்கெட்டில் AI நிறுவனங்களின் ஆர்வம் வேகமாக அதிகரித்து வருவதை இந்த ஒப்பந்தம் வெளிக்காட்டி உள்ளது. ஏற்கனவே, பெண்கள் பிரீமியர் லீக் உடன் ChatGPT நிறுவனம் 16 கோடி ரூபாய்க்கு விளம்பர ஒப்பந்தம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.இதையும் படியுங்கள் : “தலைவர் தம்பி தலைமையில்” படம் ரூ.18 கோடிக்கு மேல் வசூல்