நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு டி20 போட்டியில் அறிமுகமான கேன் வில்லியம்சன், நியூசிலாந்து அணிக்கு நீண்ட நாள் கேப்டனாக இருந்தார். அவர் 93 டி20 போட்டிகளில் 15 அரைசதத்துடன் 2,575 ரன்களை அடித்துள்ளார்.