சஞ்சு சாம்சன் டாப் ஆர்டரில் அதிகம் அசத்துவார் என்பதால் அவருக்கு அங்கே விளையாடும் வாய்ப்பைக் கொடுங்கள் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து பேசிய அவர், சஞ்சு சாம்சன் பவர்பிளேயில் விளையாட வேண்டும் என்பது தனது விருப்பம் என கூறியுள்ளார்.