77 ஆண்டுகளில் இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கும் வேகப்பந்து வீச்சாளர்கள் கேப்டன்களாக உள்ள சாதனையை பும்ரா மற்றும் கம்மின்ஸ் இணைந்து படைத்துள்ளனர். இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் 1947-ம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட்டில் நேருக்கு நேர் விளையாடி வரும் நிலையில், இரு அணிகளுக்கும் வேகப்பந்து வீச்சாளர்கள் கேப்டனாக உள்ளது இதுவே முதல் முறையாகும்.