மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. நவி மும்பையில் நடைபெற்ற போட்டியில் முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 195 ரன்களை குவித்தது. நாட் ஸ்கீவர் 70 ரன்களும், ஹர்மன்பிரீத் கவுர் 74 ரன்களும் விளாசினர். 196 ரன்கள் கடின இலக்குடன் விளையாடிய டெல்லி அணி, 20 ஓவர்களில் 145 ரன்களை மட்டுமே எடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மும்பை அணி சார்பில் அமீலியா கெர், நிகோலா கேரி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.இதையும் படியுங்கள் : சோம்நாதர் ஆலயத்தில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு