தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆடும் லெவனில் துருவ் ஜுரேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், தென் ஆப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிராக நடைபெற்ற 2வது டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சதமடித்த துருவ் ஜுரேலுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.