இந்திய மகளிர் அணி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், சிறு வயதில் கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ்.தோனியிடம் இருந்து வெற்றி கோப்பை வாங்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆட்டத்தை இறுதிவரை கொண்டு சென்று முடிப்பதில் வல்லவரான மகேந்திர சிங் தோனியுடன் மகளிர் அணியின் ஃபினிஷர் என ரசிகர்கள் இணையத்தில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்