துலீப் டிராபி போட்டியை ஒளிபரப்பு செய்யாத பிசிசிஐ-யின் நடவடிக்கைக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் முதல்-தர போட்டியான ரஞ்சி டிராபிக்குப் பிறகு மிகப்பெரிய போட்டியாக துலீப் டிராபி பார்க்கப்படுகிறது. 4 நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளை ரசிகர்கள் பார்க்க விரும்பினர். ஆனால் பிசிசிஐ லைவ்-ஸ்ட்ரீமும், ஒளிப்பரப்பும் செய்யாததால் அதிருப்தியடைந்தனர். உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக விளங்கும் பிசிசிஐ-யால், உள்நாட்டின் முக்கிய போட்டிகளை ஒளிபரப்ப முடியவில்லையா? என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.இதையும் படியுங்கள் : நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் உலகின் NO.1 வீராங்கனை சபலென்கா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்