இங்கிலாந்தின் டி20 கிரிக்கெட் அணியின் இளம் வயது கேப்டன் என்ற பெருமையை 21 வயதான ஜேக்கப் பெத்தெல் பெற்றுள்ளார். அயர்லாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணியை ஜேக்கப் பெத்தெல் வழிநடத்தவுள்ளார். இரு அணிகளுக்கு இடையேயான போட்டிகள், செப்டம்பர் மாதம் 17, 19, 21 ஆகிய தேதிகளில் அயர்லாந்தில் நடைபெறவுள்ளன.