ஐசிசி டி-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் பந்து வீச்சை பொறுத்தவரையில் வருண் சக்கரவர்த்தி 4ஆவது இடத்துக்கும், ரவி பிஷ்னோய் மற்றும் அர்ஷ்தீப் சிங் முறையே 6 மற்றும் 10ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். பேட்டிங்கை பொறுத்தவரை அபிஷேக் சர்மா முதலிடத்திலும், திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் முறையே 2 மற்றும் 6ஆவது இடத்திலும் உள்ளனர்.