வங்க தேசத்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம், வங்கதேசம் - அயர்லாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியில் எதிரொலித்ததால் ஆட்டம் 3 நிமிடம் தடைபட்டது. மைதானம் அதிர்வதை அறிந்த அனைத்து வீரர்களும் தரையில் அமர்ந்து கொண்டனர். அதன்பிறகு ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்த போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் சிலர் மைதானத்தை விட்டு வெளியேறினர்.