ஜனவரி மாதம் மெல்போர்னில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடருக்காக, செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், முன்னாள் முன்னணி வீரரான இங்கிலாந்தின் ஆண்டி முர்ரேவை தனது புதிய பயிற்சியாளராக அறிவித்தார்.தனது மிகப்பெரிய போட்டியாளர்களில் ஒருவர் தனது பக்கத்தில் பயிற்சியாளராக இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.