சென்னை சேப்பாக்கம் மைதானத்துல நடந்த வங்கதேச அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் சதம் விளாசியும், 5 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றியும் அசத்தியிருந்தார். இதையடுத்து இந்திய மைதானத்துல மட்டும் தான் அஸ்வின் நல்லா விளையாடுறாரு, ஆனா வெளிநாட்டு மைதானங்கள்ல இந்தியாவுல விளையாடுறத போல விளையாட மாட்றாரு அப்படினு விமர்சனங்கள் எழுந்துச்சு. அந்த விமர்சனங்கள் தொடர்பா பேசியிருக்கும் இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் , அஸ்வின் எவ்வளவோ சாதனைகள இந்திய அணிக்காக படைத்தும் அவரை குறை சொல்றாங்கனு வேதனைய வெளிப்படுத்தினாரு. மேலும் சொந்த மண்ணில் தான் இல்லாமல் இந்தியா ஒரு தொடரை கூட விளையாட முடியாது என்ற நிலையையும் அஸ்வின் எட்டி இருக்கிறதாவும் தினேஷ் கார்த்திக் பாராட்டி இருக்காரு.