டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஜாம்பவான் தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் நாள் டெஸ்ட் போட்டியின் முடிவில் ரிஷப் பந்து 65 ரன்கள் அடித்து அசத்தினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 76 என்ற குறைந்த இன்னிங்ஸில் 3 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார். இதற்கு முன் 144 இன்னிங்ஸில் 3ஆயிரம் ரன்களை கடந்திருந்த எம்.எஸ்.தோனியின் சாதனையை பண்ட் முறியடித்தார்.