சர்வதேச கிரிக்கெட்டில் மதிப்புமிக்க வீரராக கெளரவிக்கப்படும் ஐசிசி-யின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் 11வது இந்திய வீரராக தோனி இடம்பெற்றார். இந்த கவுரவமிக்க பட்டியலில் தோனி உள்பட 7 வீரர்களை சேர்த்து ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன், சவுத் ஆப்பிரிக்காவின் ஹாசிம் ஆம்லா, கிரேம் ஸ்மித் மற்றும் நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி ஆகியோர் சேர்கப்பட்டுள்ளனர். மேலும், பாகிஸ்தான் வீராங்கனை சனா மிர் மற்றும் இங்கிலாந்தின் சாரா டெய்லர் ஆகியோரும் இந்த பட்டியலில் இணைந்திருக்கிறார்கள்.