டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் பி.வி.சிந்து முன்னேறினார். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில், இந்தியாவின் பிவி சிந்து, சீன வீராங்கனையான ஹான் யூ உடன் மோதினார். இதில் முதல் செட்டை 18-21 என இழந்த பி.வி.சிந்து, அடுத்த இரு செட்களை 21-12, 21-16 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் காலிறுதியில், பி.வி.சிந்து, இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்காவை (( Gregoria Mariska ))சந்திக்கிறார்.