லீசெல் லீ அதிரடி ஆட்டத்தால் உத்தரபிரதேசம் மகளிர் அணியை வீழ்த்தி கடைசி பந்தில் டெல்லி மகளிர் அணி திரில் வெற்றி பெற்றது. மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 7-வது லீக் ஆட்டத்தில் டெல்லி, உத்திரபிரதேசம் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த உத்திர பிரதேசம் வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி கடைசி ஓவரில் 3 விக்கெட் இழந்து 158 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.இதையும் படியுங்கள் : அல்லு அர்ஜூன்-லோகேஷ் கூட்டணியில் புதிய திரைப்படம்