வேகபந்து வீச்சாளர் பும்ராவின் யார்க்கர் பந்தில் ஸ்ரேயாஸ் ஐயர் அடித்த இந்த ஷாட்தான் நடப்பு ஐ.பி.எல். தொடரின் சிறந்த ஷாட் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், பஞ்சாப் - மும்பை மோதிய இரண்டாம் தகுதி சுற்று போட்டியில், ஸ்ரேயஸ் ஐயர் பேட்டிங் செய்த போது பும்ரா வீசிய யார்க்கர் பந்து மிடில்-ஸ்டம்பை உடைக்கும் அளவிற்கு வந்தது அதனை ஸ்ரேயாஸ் ஐயர் பவுண்டரி அடித்து, உலகின் சிறந்த பந்து வீச்சாளருக்கு நேரடியாக அழுத்தம் கொடுத்தார் என தெரிவித்தார்.