மேஜர் லீக் கால்பந்து தொடரில் இண்டர் மியாமி அணியை வீழ்த்தி சின்சினாட்டி அணி அபார வெற்றி பெற்றது. சின்சினாட்டி நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் இண்டர் மியாமி - சின்சினாட்டி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய சின்சினாட்டி அணி 3க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.