சீன மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் அனுபமா உபாத்யாயா தோல்வி அடைந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் அனுபமா உபாத்யாயா, தைவானின் லின் ஹ்சியாங்-டி உடன் மோதினார். இதில் லின் ஹசியாங்-டி 21க்கு 23, 21க்கு 11, 21க்கு 10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.