டிஎன்பிஎல் தொடரில் நெல்லை அணிக்கு எதிரான போட்டியில், சேப்பாக் அணி 41 ரன்கள் வித்யாசத்தில் அபார வெற்றிபெற்றது. டாஸ் வென்ற நெல்லை அணி, பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் அணி, 20 ஓவரில் 7 விக்கெட் இழந்து 212 ரன்கள் குவித்தது. 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய நெல்லை அணி, 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்து.