ரோமில் நடைபெற்று வரும் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றுக்கு ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் லாஸ்லோ டிஜெரேவுடன் மோதிய அவர், 7க்கு 6, 6க்கு 2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். நான்காவது சுற்றில் ரஷ்யாவின் கரேன் கச்சனோவ் உடன் மோத உள்ளார்.