2026 உலக கோப்பை கால்பந்து தொடரில் பயன்படுத்தப்படும் பந்தை FIFA அறிமுகம் செய்தது. உலகக் கோப்பை தொடரை நடத்தும் கனடா, மெக்சிக்கோ, அமெரிக்கா நாட்டு கொடிகளின் வண்ணங்களை கொண்டு, இந்த கால்பந்தை அடிதாஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது. 3 நாடுகள் சேர்ந்து தொடரை நடத்துவதால் இந்த கால் பந்திற்கு TRIONDA என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பந்தில் 500Hertz மோஷன் சென்சார் சிப் பொருத்தப்பட்டுள்ளதால்,. இது ஒவ்வொரு அசைவையும் நிகழ்நேரத்தில் கண்காணிக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.