ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக, கோப்பையை இந்தியாவிடம் தர தயாராகவே உள்ளதாக என்று அதன் தலைவர் நக்வி தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையிலும், பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது. இதனால் கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு கொடுக்கப்படவில்லை. இதனிடையே "கோப்பையை பெற BCCI ஆர்வமாக இருந்தால் ACC அலுவலகத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளலாம்" என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் நக்வி கூறியுள்ளார்.