இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடுவார் என இந்திய துணை பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட் தெரிவித்துள்ளார். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என்று முன்னதாகவே தெரிவிக்கப்பட்ட நிலையில், நெருக்கடியான 4 வது போட்டியில் அவர் விளையாடுவாரா என்று சந்தேகம் எழுந்தது.