விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான ஜானிக் சின்னரை எதிர்கொண்டு அபாரமாக விளையாடி முதல் 2 சுற்றுகளிலும் வெற்றி பெற்ற, பல்கேரிய வீரர் டிமிட்ரோ காயம் காரணமாக வெற்றிவாய்ப்பை இழந்ததால் கதறி அழுதார். அவரை சக வீரரான சின்னர் கட்டியணைத்து ஆறுதல் கூறிய நிலையில், ரசிகர்கள் எழுந்து நின்று டிமிட்ரோவுக்கு மரியாதை செலுத்தினர்.