12ஆவது புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி பெற்றது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக மோதின. ஆனால் ஆட்ட நேர முடிவில் 33- 29 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி பெற்றது. முன்னதாக நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி. யோத்தாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 40-35 என்ற புள்ளி கணக்கில் உ.பி. யோத்தாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.