11வது புரோ கபடி தொடரின் லீக் ஆட்டத்தில் அரியானா அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது. ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் தொடக்கம் முதலே இரு அணிகளும் அதிரடியாக விளையாடின. இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் தலா 19 புள்ளிகள் எடுத்த நிலையில், இரண்டாவது பாதியில் பெங்கால் அணியினர், ஹரியானா வீரர்களை 'ஆல்-அவுட்' செய்தனர். இதனால் ஆட்டநேர முடிவில் பெங்கால் அணி 40-38 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில், யு மும்பா அணியை வீழ்த்தி புனேரி பால்டன் அணி வெற்றி பெற்றது. முதல் பாதியில் 22-16 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் இருந்த புனேரி அணி, தொடர்ந்து அதிரடியாக விளையாடி ஆட்ட நேர முடிவில் 35 - 28 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.