KKR அணியில் இருந்து முஸ்தபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டதன் எதிரொலியாக வங்க தேசத்தில் ஐபிஎல் போட்டிகளை எந்த வடிவிலும் ஒளிபரப்ப காலவரையற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வங்கதேச அரசின் செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முஸ்தபிசுர் ரஹ்மானை ஐபிஎல் அணியில் இருந்து நீக்கிய பிசிசிஐயின் நடவடிக்கை வங்க தேச மக்களை காயப்படுத்தியதுடன் அவர்களை கோபத்தில் தள்ளி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிவி மற்றும் டிஜிட்டல் என அனைத்து வடிவிலும், ஐபிஎல்லை ஒளிபரப்ப கூடாது எனவும் அந்த அறிக்கையில் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வங்க தேசத்தில் இந்துகளுக்கு எதிரான தாக்குதல் நடப்பதால், KKR அணியில் இருந்து முஸ்தபிசுர் ரஹ்மானை நீக்க அந்த அணியின் நிர்வாகத்திற்கு பிசிசிஐ உத்தரவிட்டு, அதன்படி அவர் நீக்கப்பட்டார்.