ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் ஹாங்காங் அணியை 7 விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி வெற்றிபெற்றது. முதலில் களமிறங்கிய ஹாங்காங் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. இறுதியில் 17.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.