ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்தியா - வங்கதேசம் அணிகள் ஆடிய ஆட்டம் டிராவில் முடிந்தது. 19-வதுஆசிய கோப்பை கால்பந்து போட்டி 2027-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் தற்போது பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. மேகாலயாவில் நடந்த ஆட்டத்தில் இந்தியா- வங்கதேசம் அணிகள் மோதின. இரு அணிகளும் கடைசிவரை ஒரு கோல்கூட அடிக்காததால் பூஜ்ஜியத்துக்கு - பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் போட்டி சமனில் முடிந்தது.