ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஹாங்காங் மற்றும் ஓமன் அணிகள் வெளியேறின. குரூப் பி-யில் இடம்பெற்ற ஹாங்காங் அணி தாம் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்தது. அதே போல் குரூப் ஏ-ல் இடம்பெற்ற ஓமன் அணி தாம் பங்கேற்ற 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. இதனால் இவ்விரு அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தன.