விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவுடன் போலாந்தின் இகா ஸ்வியாடெக் மோதவுள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவுடன் மோதிய அனிசிமோவா, 6க்கு 4, 4க்கு 6, 6க்கு 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு அரையிறுதியில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக் உடன் மோதிய இகா ஸ்வியாடெக், 6க்கு 2, 6க்கு 0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.