ஜீவனாம்சம் தொகை 4 லட்ச ரூபாய் போதாது என்றும் பராமரிப்பு தொகையை அதிகரித்து தரகோரி, இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார். இந்த மனுவைத் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், "மாதத்திற்கு 4 லட்ச லட்ச ரூபாய் என்பது பெரிய பணம் இல்லையா?" என்று ஆச்சர்யம் தெரிவித்தனர். தொடர்ந்து முகமது ஷமி மற்றும் மேற்கு வங்க அரசுக்கு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு அடுத்த விசாரணையை டிசம்பருக்கு ஒத்திவைத்தனர்.